நாடக நடிகர், சின்னத்திரை, திரைப்பட நடிகர் என பல திரைகளில் அற்புத குணசித்திர நடிகராக கலை சேவை செய்து வந்த நடிகர் சீனு மோகன் இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

வருசம் பதினாறு என்ற படத்தின் மூலம் தமிழ் திரை ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சீனு மோகன். இவர் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன் கிரேசி மோகனின் நாடகக்குழுவில் நடிகராக இருந்தார். 

அண்மையில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்திலும், மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்திலும் இவர் நடித்திருந்தார். இறைவி, ஆண்டவன் கட்டளை, ஸ்கெட்ச் உள்ளிட்ட பல படங்களில் நடித்து அற்புதமான குணசித்திர நடிகராக வலம் வந்தவர்.

62 வயதாகும் இவருக்கு இன்று காலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. இவரது இறுதிகிரிகை 29 ஆம் திகதியன்று சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.