(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கைக்கான சீன தூதுவர் ஷெங் சுயுவோன் மற்றும் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்று வியாழக்கிழமை விஜேராம மாவத்தையில் உள்ள மஹிந்தவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. 

இதன் போது சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்கின் புதுவருட வாழ்த்து செய்தியை தூதுவர் கையளித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவிற்கு சீனாவிற்கும் இடையிலான நீண்ட கால நட்பு குறித்து அந்நாட்டு ஜனாதிபதி கௌரவத்துடன் நினைவுகப்படுத்தியதாக இந்த சந்திப்பின் போது தூதுவர் எடுத்துரைத்துள்ளார்.