அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்டிரம்ப் ஈராக்கிற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அங்குள்ள அமெரிக்க துருப்பினரை சந்தித்துள்ளார்.

டிரம்ப் தனது மனைவி மெலெனியாவுடன் ஈராக் தலைநகர் பக்தாத்திலுள்ள அல்அசாத் விமான தளத்திற்கு சென்று அங்குள்ள அமெரிக்க படையினரை சந்தித்துள்ளார்

சிரியாவிலுள்ள  அமெரிக்க படையினரை விலக்கிக்கொள்ளும் டிரம்பின் அறிவிப்பினால் கடும் சர்ச்சை எழுந்துள்ள நிலையிலேயே அவரின் விஜயம் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க துருப்பினர் மத்தியில் சிரியாவிலிருந்து படைகளை விலக்கும் தனது முடிவை நியாயப்படுத்தியுள்ள டிரம்ப் ஐஎஸ் அமைப்பை தோற்கடித்ததன் காரணமாகவே இது சாத்தியமானதாக தெரிவித்துள்ளார்.

சிரியாவில் அமெரிக்க படையினரை நிரந்தரமாக வைத்திருக்கும் எண்ணம் எப்போதும் இருந்ததில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியான பின்னர் மோதல் இடம்பெறும் பகுதிகளில் நிலைகொண்டுள்ள  அமெரிக்க துருப்பினரை  சென்று பார்க்காதது குறித்து கடும் விமர்சனங்களை டிரம்ப் சந்தித்திருந்த நிலையிலேயே ஈராக்கிற்கான அவரது விஜயம் இடம்பெற்றுள்ளது.

டிரம்புடன் அவரது சகாக்கள் சிலரும் அமெரிக்க புலனாய்வு துறையை சேர்ந்தவர்களும் செய்தியாளர்கள் குழுவினரும் ஈராக் சென்றுள்ளனர்.

தனது மனைவியின் பாதுகாப்பே தனது முக்கிய கவலைiயாக காணப்பட்டது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.