யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் தொலைபேசி மீள் நிரப்பு அட்டை கொள்வனவு செய்வது போல் பாசாங்கு செய்த இரு இளைஞர்கள் வர்த்தக நிலையத்தில் நின்ற பெண்மணியின் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள நீர்த்தாங்கி அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உள்ளே வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் நின்றிருந்த சமயம் வர்த்தக நிலையம் முன்பாக உரிமையாளரின் தாயார் கதிரையில் அமர்த்திருந்தார். இதனை அவதானித்த இருவர் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் தொலைபேசி மீள் நிரப்பு அட்டை ஒன்றினை கொள்வனவு செய்துள்ளார். குறித்த சமயம் இரண்டாம் நபர் மோட்டார் சைக்கிள் தயார் நிலையில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் மீள் நிரப்பு அட்டையை கொள்வனவு செய்தவர் வர்த்தக நிலையத்தின் முன்னாள் அமர்ந்திருந்த பெண்மணி அணிந்திருந்த 3 பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு மிகவேகமாக ஓடிச் சென்று மோட்டார் சைக்கிளில் ஏறிய நிலையில் வேகமாகத் தப்பிச் சென்றுள்ளனர்.

வர்த்தக நிலையத்தின் உள்ளே நின்ற உரிமையாளர் அவர்களை தடுக்க முயன்றும் கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை.

 சம்பவமானது நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. எனினும் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதோடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.