கிளிநொச்சி ஏ-35 பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியின் கோரக்கன்கட்டுப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. 

முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று எதிரே வந்த துவிச் சக்கரவண்டியுடன் மோதியே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

படுகாமடைந்தவர் உடனடியாகவே அம்பியூலன்ஷ் வண்டி மூலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.