இந்தாண்டு நத்தார் பண்டிக்கையில் வானவேடிக்கை காரணமாக பாதிப்புக்குள்ளான எவரும் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது. 

நத்தார் தினமான நேற்று எவரும் வானவேடிக்கை தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியாசாலையில் அனுமதிக்கபட்டவில்லை என வைத்தியசாலையின் பயிற்சி அதிகாரி புஸ்பா ரமயா த சொய்ச்சா தெரிவித்தார். 

எனினும், நேற்று மற்றும் நேற்று முன்தினம்  நடைபெற்ற பல்வேறு விபத்துக்களில் 546 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.