(நா.தனுஜா)

நான் தீவிர அரசியலிருந்து ஓய்வு எடுக்கும் காலத்தில் மிகவும் பரபரப்பான 51 நாட்கள் பற்றி ஒரு புத்தகத்தை எழுதுவதாக ஏற்கனவே கூறியிருக்கிறேன். இப்பொழுது அப்புத்தகத்தை எழுதினால், எங்களது தரப்பிலும் எதிர்தரப்பிலும் பலர் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் நிலைமை ஏற்படும் என நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மேலும் கற்பனை உலகில் சஞ்சரித்துக்கொண்டு பொதுமக்களின் அபிலாசைகளை உதறித்தள்ளுவதற்கு ஒருபோதும் தயாரில்லை எனவும் தற்போது மீண்டும் வாய்த்துள்ள சந்தர்ப்பத்தை இயன்றவரை பயன்படுத்தி மக்களின் தேவைகளை பாரியளவில் நிறைவேற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.