(நா.தினுஷா) 

போட்டித்தன்மையான வியாபார சூழலினை உருவாக்கவாக்குவதனூடாகவே துரிதகதியில் பொருளாதார மீள்கட்டியெழுப்பும் பணிகளை முன்னெடுக்க முடியும். அவ்வாறான பொருளாதார மீள்கட்டியெழுப்புதலினூடாக நாட்டின் தொழில்வாய்ப்புக்களை அதிகரிக்கவும் எதிர்பார்ப்பதாக பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது விநியோக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். 

இன்று புதன்கிழமை அமைச்சு பொறுப்பேற்றதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.