மாவனெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள புத்தர் சிலையை தாக்கிய நபரை பிரதேசவாசிகள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் தப்பி சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், மற்றொரு சந்தேக நபர் புத்தர் சிலையை சிதைக்க முற்பட்ட வேலையில் பிரதேசவாசிகளால் பிடிபட்டதாக தெரிவித்துள்ளனர். 

இன்று காலை 4 மணியளவிலேயே இச்சந்தேகநபர் சிக்கியுள்ளார். 

குறித்த சந்தேக நபரை மடக்கி பிடிக்க முற்பட்டவேளை பிரதேசவாசி ஒருவர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

மாவனெல்லை ஹிங்குல பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.