மெக்சிகோ நாட்டில் மக்கள் தொகை அதிகம் மிகுந்த மிகப்பெரிய மாகாணம் மத்திய பியூப்லா. இங்கு கடந்த ஜூலை மாதம் ஆளுனர் தேர்தல் நடந்தது அதில் வெற்றி பெற்ற அலோன்சா  ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளர்.

இவ்வாறு ஆளுனர் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அந்த மாகாணத்தின் முதல் பெண் ஆளுனராக  புகழை அவர் பெற்றார்.

ஆனால் மார்த்த எரிக்கா அலோன்சாவின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாத ஜனாதிபதி லோபஸ் ஒப்ரடாரின் மோர்னே கட்சி தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

அதன் பின்னர் தேர்தல் தீர்ப்பாயம் இதில் தலையிட்டு விசாரணை நடத்தி, மார்த்த எரிக்கா அலோன்சாவின் வெற்றியை உறுதி செய்தது.

இந்த நிலையில், தேர்தல் முடிந்து 5 மாதங்களுக்கு பிறகு, பியூப்லா மாகாணத்தின் கவர்னராக மார்த்த எரிக்கா அலோன்சா கடந்த 14 ஆம் திகதி பதவி ஏற்றார்.

மார்த்த எரிக்கா அலோன்சாவின் கணவர் ரபேல் மோரேனோ வல்லே. மெக்சிகோ பாராளுமன்ற அமைச்சரான இவர் 2011-2017 வரை பியூப்லா மாகாண ஆளுனராக  இருந்துள்ளார்.

இந்த நிலையில், மார்த்த எரிக்கா அலோன்சா தனது கணவருடன் நேற்று முன்தினம் தலைநகர் பியூப்லாவில் இருந்து ஹெலிகொப்டரில் புறப்பட்டு சென்றார்.

ஹெலிகொப்டரில் 2 விமானிகளும், மேலும் ஒரு பயணியும் இருந்துள்ளனர்.

வானில் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் திடீரென அங்குள்ள ஒரு வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. 

இவ்வாறு கீழே விழுந்த ஹெலிகொப்டரில் தீப்பிடித்தது முழுவதுமாக எரிந்ததுள்ளது.

இந்த கோர சம்பவத்தில் மார்த்த எரிக்கா அலோன்சா, அவருடைய கணவர் ரபேல் மோரேனோ வல்லே உள்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

மெக்சிகோவில் முக்கிய பிரபலங்கள் செல்லும் ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த ஹெலிகொப்டர் விபத்தில் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் பிரான்சிஸ்கோ பிளேக் மோரா உயிர் இழந்தமை குறிப்பிடத்தக்கது.