நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 4 விக்கெட்டுக்களை இழந்து, 88 ஓட்டங்களை குவித்துள்ளது.

இவ் விரு அணிகளுக்கிடையோயன இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கிறிஸ்ட்சர்சில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலாவதாக களத் தடுப்பை தேர்ந்தெடுக்க நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 178 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

நியூஸிலாந்து அணி சார்பாக நியூஸிலாந்து அணி சார்பாக டிம் சவுதி 68 ஓட்டங்களையும், பி.ஜே. வோட்லிங் 46 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய சுரங்க லக்மால் 5 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார 3 விக்கெட்டுக்களையும், தில்றூவான் பெரேரா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர். 

தனுஷ்க குணதிலக்க 8 ஓட்டத்துடனும், திமுத் கருணாரத்ன 7 ஓட்டத்துடனும், தினேஷ் சந்திமால் 6 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேற இலங்கை அணி 21 ஓட்டத்துக்கு மூன்று விக்கெட்டுக்களை பிறிகொடுத்தது. 

எனினும் மூன்றாவது விக்கெட்டுக்காக கைகோர்த்த குசல் மெண்டீஸ் மற்றும் அஞ்சலோ மெத்தியூஸ் ஜோடி சற்று நிதானமாக துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை ஆரம்பித்த போதும் இலங்கை அணி 51 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை குசல் மெண்டீஸ் 15 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

அவரின் ஆட்டமிழப்பையடுத்து ரோஷான் சில்வா மெத்தியூஸுடன் கைகோர்த்தாட முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 88 ஓட்டங்களை குவித்தது.

ஆடுகளத்தில் மெத்தியூஸ் 27 ஓட்டத்துடனும், ரோஷான் சில்வா 15 ஒட்டத்துடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் டிம் சவுதி 3 விக்கெட்டுக்களையும், கொலின் டி கிராண்ட்ஹாம் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.