வீதி விபத்தொன்றில் தாயொருவர் உயிரிழந்துள்ள நிலையில் தந்தை மற்றும் 3 பிள்ளைகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெற்கு அதிவேக வீதியின் தொடங்கொட வெளியேறும் பகுதிக்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேனொன்று வீதியின் அருகில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பதாகையொன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தின்போது வேனில் பயணித்த தாய் உயிரிழந்துள்ளடன் தந்தை மற்றும் அவர்களது இரு மகள்மாரும் மகனொருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதியின் தூக்ககலக்கமே விபத்திற்கான காரணமென சந்தேகிக்கும் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.