(ஆர்.யசி)

அமைச்சர் நியமனங்களை பிரதமரின் ஆலோசனைக்கு அமையவே ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும். மாறாக ஜனாதிபதி அமைச்சரவை நியமனத்தில் தன்னிச்சையாக தீர்மானம் எடுக்க முடியாது என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, மீண்டும் எமது பெயர்களை பரிந்துரைக்கவுள்ளோம் ஜனாதிபதி நிராகரித்தால் நீதிமன்றம் நாடுவோம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

ஜனாதிபதி தொடர்ச்சியாகவே ஐக்கிய தேசிய கட்சியை பழிவாங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே செயற்பட்டு வருகின்றார். அவர் கடந்து வந்த பாதையை மறந்து யார் அவருக்கு இந்த ஆசனத்தை உருவாக்கிக் கொடுத்தது என்ற நன்றியை மறந்து இன்று சுயநலமாக செயற்பட்டு வருகின்றார். அவர் சுயமாக சிந்திக்க முடியாது தவறான வழிநடத்தலில் செயற்பட்டு வருகின்றார் என்றார்.