உடல் எடையை பாதுகாப்பாக குறைக்கும் உணவு முறை

By R. Kalaichelvan

25 Dec, 2018 | 06:34 PM
image

இன்றைய திகதியில் உடல் உழைப்பு என்பது குறைந்து விட்டது. அதாவது கடினமாக உழைத்து பசித்து சாப்பிடுவது குறைந்துவிட்டது. புத்திசாலித்தனமாக அதிகமாக சம்பாதித்து, விரும்பியதை அகால வேளைகளில் சாப்பிடும் பழக்கம் அதிகரித்துவிட்டது. இதனால் ஒவ்வொருவரும் தங்களுக்கான ஆரோக்கியமான உடல் எடையிலிருந்து இருபது முதல் முப்பது கிலோ வரை கூடுதலாகவேயிருக்கிறார்கள்.

இவர்களுக்காகவே மருத்துவ துறை சில உணவு பழக்கவழக்கங்களை அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நியூட்ரிசிஸ்டம், மயோ  கிளினிக் டயட், மேக்றோ கவுண்ட்டிங் டயட், ஜில்லியன் மைக்கேல்ஸ் டயட், மெடிஃபாஸ்ட் என சில உணவு பழக்கங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதில் மயோ கிளினிக் டயட் என்ற உணவு முறை பெரும்பாலானவர்களை கவர்ந்திருக்கிறது. இது உடல் உடையை குறைப்பதுடன் சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்துகிறது என்கிறார்கள் பயனாளர்கள்.

மயோ கிளினிக் டயட் என்பது, பழங்களும், காய்கறிகளும் இணைந்த ஒரு உணவு முறை. பசிக்கும் போது மட்டுமே சாப்பிடவேண்டும் என்பதும், நாளொன்றுக்கு மூன்று வேளை மட்டுமே சாப்பிடவேண்டும் என்று வலியுறுத்துகிறது. அத்துடன் இந்த உணவு முறையில் பருப்பு வகைகளும் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த உணவு முறை பட்டியலில் ஓட்ஸ், முழு தானிய ரொட்டி, பழுப்பு அரிசி, குறைந்த கொழுப்புள்ள தயிர் மற்றும் பாலாடைக்கட்டி. வேர்க்கடலை, பாதாம் பருப்பு மற்றும் ஏனைய பருப்பு வகைகள், வெண்ணெய், வாழைப்பழம், அன்னாசி பழம், திராட்டை, தக்காளி, காலிப்ளவர், பசலைக்கீரை, அவேகேடா,  ஓலீவ் ஓயில், சால்மன் மீன், இலவங்கபட்டை உள்ளிட்டவை அந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.

இதனை சாப்பிடுவது மட்டுமல்லாமல் தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சியை கட்டாயம் மேற்கொள்ளவேண்டும். இதனை தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் போது ,உடல் எடையை குறைவதுடன், சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்துகிறது.

டொக்டர் சிறிதேவி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்