நடிகை ஹன்சிகா நடித்து வரும் ஐம்பதாவது படம் ‘மஹா’. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது இப்படத்தின் இரண்டாவது லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

 

இந்த இரண்டாவது போஸ்டரில் ஹன்சிகா இஸ்லாமீய பெண்ணின் தோற்றத்தில் தொழுகை நடத்துவது போல் இடம்பெற்றிருக்கிறது. பின்னணியில்  ஒரு பெண்ணின் நிழல் தன்னைத்தானே துப்பாக்கியில் சுடுவதும், அந்த ஒலி கேட்டு புறாக்கள் பறப்பதும் போல் உள்ளது.

ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக்கில் ஹன்சிகா இந்து மத துறவிகள் அணியும் காவி உடையை அணிந்து புகைபிடிப்பது போல் தோற்றம் இருந்தது. இதற்கு சமூக ஆர்வலர்கள் சிலர் காவல் ஆணையரிடம் புகாரெல்லாம் அளித்திருக்கிறார்கள். தற்போது இந்த புகைப்படத்தைப் பார்த்து யார் எம்மாதிரியான சர்ச்சையை கிளப்பபோகிறார்கள் என்று தெரியவில்லை.

இருந்தாலும் ஹன்சிகாவின் ஐம்பதாவது படம்,இசையமைப்பாளர் ஜிப்ரானின் இருபத்தைந்தாவது படம் என பல சிறப்பம்சங்களைப் பெற்றிருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்கி வருகிறார். இதனிடையே படத்தின் டீஸரும்,டிரைலரும் சர்ச்சையைக் கிளப்பும் என்கிறார்கள் படக்குழுவினர்.