(ஆர்.யசி)

அரசாங்கம் கடந்த காலத்தில் விட்ட தவறுகளை இனியும் செய்யுமானால் மக்களின் புரட்சியை தடுக்க இயலாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். 

மேலும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தேர்தல்களை நடத்துவதில் பின்வாங்கும் நிலைமையே காணப்பட்டு வருகின்றது. 

ஆரம்பத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்தாது நாட்டினை நாசமாக்கிய நிலையில் காலம் கடந்தேனும் தேர்தலை நடத்தினர். அதன் விளைவுகளை அரசாங்கம் நன்றாகவே அனுபவித்தது. 

அதேபோல் இப்போதும் நாட்டில் ஆறு மாகாணசபைகள் கலைக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று மாகாணசபைகள் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் கலையவுள்ளது. 

ஆகவே இப்போது அரசாங்கம் ஒன்பது மாகாணசபைகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவதாக தெரிவித்துள்ளனர். இது நடைமுறை சாத்தியமற்ற காரணியாகும்.