கிளிநொச்சியில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு தொடர்ந்தும் உதவிகள் கிடைத்து வருகின்றன.

அந்த  வகையில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். முருகேசு சந்திரகுமார் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை சென்று பார்வையிட்டுள்ளதோடு அவர்களுக்கு தேவையான  அத்தியாவசிப் பொருட்களையும் வழங்கி வைத்துள்ளார்.

திருமுறிகண்டி,பாரதிபுரம்,மயில்வாகனபுரம்,பிரமந்தனாறு, நாகேந்திரபுரம்,தம்பிராசபுரம்,ஆகிய நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு நேற்றையதினம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கியள்ளதோடு ஏனைய நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கும் தொடர்ந்தும் உதவிப் பொருட்களை வழங்கி வைப்பதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு பாதிக்கப்பட்டுள்ள  மக்கள் தொழில் வாய்ப்பை இழந்துள்ளமையால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனவே  அவர்களுக்கான ஒரு மாத்திற்கு தேவையான  உலருணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநரிடம் மு சந்திரகுமார் கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.