ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் திங்கட்கிழமை தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அரச அலுவலகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதல்கள் உட்பட்ட தாக்குதல்களிலேயே இந்த உயிரிழப்புகள்  ஏற்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் வன இலாகா திணைக்களத்தின் மீது கார்க்குண்டு தாக்குதலை மேற்கொண்ட பின்னரே தீவிரவாதிகள் இந்த தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்

இதன் பின்னர் உள்ளே நுழைந்த தீவிரவாதிகள் அலுவலக ஊழியர்களை பணயக்கைதிகளாக பிடித்துள்ளனா

இதன் போது கடும் துப்பாக்கி  சமரும் இடம்பெற்றுள்ளது.