கடந்த சனிக்கிழமை இந்தோனேஷியாவைத் தாக்கிய சுனாமிப் பேரலையால் உயிரிழந்தவர்களின் தொகை 373 ஆகவும், காயமடைந்தவர்களின் தொகை 1459 ஆகவும் உயர்வடைந்துள்ளது.

அனக் கிரகட்டாவ் எரிமலைக் குமுறலையடுத்து கடலுக்குள் ஏற்பட்ட மண்சரிவுகளால் மேற்படி சுனாமிப் பேரலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் கிரகட்டாவ் எரிமலை தொடர்ந்து குமுறி வருவதால் பிறிதொரு சுனாமிப் பேரலை அனர்த்தம் ஏற்படுதவதற்கான வாய்ப்புள்ளதாக தேசிய அனர்த்த முகவர் நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட இந்த சுனாமித் தாக்கம் காரணமாக இதுவரை 373 பேர் உயிரிழந்ததுடன், 1459 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 128 பேர் காணாமல் போயுள்ளனர்.

மேலும் மீட்புப் படையினர் தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.