(எஸ்.ரவிசான்) 

தேசிய அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இன்றைய அரசாங்கமானது தன்னுடையது என்பதனை மறந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் மருதானை சண்டியர் போல செயற்படுவதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். 

முன்னால் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார துங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடையே காணப்படுகின்ற தனிப்பட்ட விரோதங்களே ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பிளவு நிலையினை மீண்டும் மீண்டும் வலுப்படுத்துகின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அதற்கு ஆதரவான ஊடகங்கள் இதனை சுயநல தேவைக்கருதி பயன்படுத்தி கொள்ள முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தினார். 

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் டிலான் பெரேரா.

கடந்த பொது தேர்தலின் போது இரண்டு பிரதான கட்சிகளில் எந்தவொறு கட்சிக்கும் அரசாங்கத்தினை ஸ்தாபிக்க முடியாமையின் காரணமாக கட்சி தலைவர் உட்பட மத்திய குழுவின் தீர்மானத்தின் படி தேசிய அரசாங்கமொன்று ஸ்தாபிக்கப்பட்டது. அந்தவகையில் நாட்டிற்கும், மூவின மக்களுக்குமான நன்மைக்கருதி நாம் தேசிய அரசாங்கத்தின் கீழ் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அந்தவகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்கள் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களின் அன்மைக்கால செயற்பாடுகளில் நாம் திருப்தியடை முடியாதுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேசிய அரசாங்கம் என்பதனை மறந்து எதிர்க்கட்சி தலைவர் என்ற பாணியில் பாராளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் மருதானை சண்டியர் போல விக்கிரமசிங்க விரவன்ச போல செயற்பாடுகிறார். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு செயற்படும் தருணத்தில் ஒன்றிணைந்த எதிர்கட்சியினை சேர்ந்த பராளுமன்ற உறுப்பினர்கள் பலவருடக்காலங்களாக அரசாங்கத்தில் அங்கத்துவம் பெற்று வந்த பழக்கத்திலும் அனுபவத்திலும்,  தங்களுடைய அரசாங்கம் என்ற ரீதியிலும் பாராளுமன்றத்தின் உள்ளேயும் வெளியிலும் சில செயற்பாடுகளை முன்னெடுப்பதோடு உரிமைகளையும் தருமாறு கோருகின்றனர். எனவே இக்காலத்தில் பிரதமர் உட்பட பொது எதிரணியினரின் செயற்பாடுகளில் நாட்டின் நன்மைக்கருதி மாற்றம் ஒன்று தேவை என்றே குறிப்பிட வேண்டும்என்று தெரிவித்தார்.