முல்லைத்தீவில் கடும் மழை, பல்லாயிரக் கணக்கான வயல் நிலங்கள் சேதம். சில குளங்களும் ஆபத்தில்

Published By: Vishnu

25 Dec, 2018 | 12:20 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது பெய்யும் கன மழைகாரணமாக, காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட பல்லாயிரக் கணக்கான வயல் நிலங்கள் சேதமடைந்துள்ளதுடன், சில குளங்கள் உடைப்பெடுக்கும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன.

முல்லைத்தீவு கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் காணப்படும், மொத்தம் 9679 ஏக்கர் காலபோக நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட வயற்காணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 05 குளங்கள் ஆபத்தான நிலையிலுமுள்ளதுடன், ஒரு நீர்ப்பாசன வாய்க்காலும் சேதமடைந்துள்ளது.

மேலும் ஒலுமடு கமக்கார அமைப்பிற்குட்பட்ட 675 ஏக்கர் வயல் நிலங்களும், முள்ளியவளை கமக்கார அமைப்பின் கீழ் காணப்படும் 750 ஏக்கர் வயல் நிலங்கள், ஒட்டுசுட்டான் கமக்கார அமைப்பின்கீழ் 1656ஏக்கர் வயல் நிலங்கள், துணுக்காய் கமக்கார அமைப்பின் கீழ் 700ஏக்கர் வயல் நிலங்கள், பாண்டியன்குளம் கமக்கார அமைப்பின் கீழ் 500ஏக்கர் வயல் நிலங்கள், புதுக்குடியிருப்பு கமக்கார அமைப்பின் கீழ் 4000 ஏக்கர் வயல் நிலங்கள், உடையார் கட்டு கமக்கார அமைப்பின் கீழ் 1000ஏக்கர் வயல் நிலங்கள், குமுழமுனை கமக்கார அமைப்பின் கீழ் 250ஏக்கர் வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பின் கீழ் காணப்பட்ட வயல் நிலங்கள் ஏற்கனவே பெய்த மழைகாரணமாக அழிவடைந்துவிட்டன.

அத்துடன் ஒலுமடு கமக்கார அமைப்பின் கீழ் காணப்படும் புலிமச்சினாதிகுளம், ஒலுமடுக்குளம், தாச்சரங்கன்குளம், முறியாக்குளம் என்பன குளக்கட்டிற்கு மேலால் வெள்ளம் மேவிப் பாய்ந்துள்ளது.

ஒட்டுசுட்டான் கமக்கார அமைப்பின் கீழ் காணப்படும், அம்பகாமம் குளம் குளக்கட்டால் நீர் கசிகின்றது.

மேலும் முள்ளியவளை வடக்கு பகுதியில் நீர்ப்பாசன வாய்க்கால் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10