தங்காலை குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.