மைத்திரி - மஹிந்த இணைய சாத்தியமில்லை : விக்ரமபாகு

Published By: Priyatharshan

30 Mar, 2016 | 05:12 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

மைத்திரி -மஹிந்த ஒருபோதும் இணையப்போவதில்லை. இருவரதும் கொள்கைகளுக்கிடையில் பாரிய வித்தியாசம் நிலவுகின்றது என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பயங்கரவாத தடைச்சட்டத்தில் இருந்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றோம் .

குண்டுவைத்தோ துப்பாக்கி முனையிலோ குறிப்பிட்ட சில மக்களின் கொள்கை, நம்பிக்கை அல்லது அவர்கள் சுயமாக எடுக்கும் தீர்மானங்களை மாற்ற முடியாது என ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். 

இது ஜனாதிபதியின் தனிப்பட்ட கொள்கையாகும். மாறாக சுதந்திரக்கட்சியின் கொள்கை அவ்வாறு இருக்கவில்லை.

அதனால்தான் யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்தும் இனங்களுக்கு மத்தியில் நல்லிணக்கம் ஏற்படவில்லை. இன நல்லிணக்கம் மூலமே ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி செயற்பட்டுவருவது வரவேற்கத்தக்கது.

அதேபோன்று 2002ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்துகொண்டபோது அதனை சிலர் எதிர்த்தனர்.  ஒப்பந்தம் தான் சரியான நடவடிக்கை என்று நாங்கள் கூறிவந்தோம். ஆனால் மஹிந்த ராஜபக்ஷ் இவிமல் வீரவன்ச போன்றவர்கள் இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துஇ மக்களிடம் பொய் கூறிவந்தனர். இல்லாவிட்டால் யுத்தம் இன்றி அதிகார பகிர்வின் மூலம் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியும்.

அத்துடன் 2005ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மஹிந்த வென்றாலும் ரணில் வென்றாலும் ஒன்றும் ஏற்படப்போவதில்லையென பிரபாகரன் கூறிய பொய்யின் விளைவால் அந்த மக்களின் பாதிப்பேர் அழிந்து விட்டனர். 

அந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்க 29ஆயிரம் வாக்குகளால் தான் தோல்வியுற்றார். இது ஓர் வரலாற்று தவறு என்பதை தற்போது தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

மேலும் இன நல்லிணக்கம் மூலமே மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என ஜனாதிபதி கூறிவருவதுடன் அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருகிறார். 

இவ்வாறான நிலையில் மஹிந்த ராஜபக்ஷ்வையையும் மைத்திரிபால சிறிசேனவையையும் இணைப்பதற்கு ஒருசிலர் முயற்சி செய்து வருகின்றனர். 

ஆனால் இவர்கள் இருவரதும் கொள்கை பாரியளவில் வித்தியாசமாகும். அவ்வாறு இருக்கும் போது இவர்களை ஒன்றிணைப்பது ஒருபோது இடம்பெறாத விடயமாகும்.

அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ் தற்போது அவருடைய காலத்தில் இடம்பெற்ற தவறுகளை ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அந்த தவறுகளுக்கு தான் மட்டும் பொறுப்பில்லையென தெரிவித்து வருகிறார். அவருடைய இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:12:23
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08