செவ்வாய்க் கிரகத்திலுள்ள கோரோலேவ் பள்ளத்தில், சுமார் 2 கிலோ மீட்டர் அடர்த்தியுடன் பனி நிறைந்திருக்கும் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது. 

ஐரோப்பிய விண்வெளி மையம் ‘மார்ஸ் எக்ஸ்பிரஸ் வி‌ஷன்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு 2003 ஆம் ஆண்டு அனுப்பியது. அந்த விண்கலம் செவ்வாய் கிரகம் முழுவதையும் புகைப்படங்கள் எடுத்து அனுப்பி வருகிறது. 

அந்த வகையில் குறித்த விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தின் 15 வது ஆண்டுவிழாவை சிறப்பிக்கும் விதமாக சமீபத்தில் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், செவ்வாய் கிரகத்தில் 82 கிலோ மீ்ட்டர் அளவுக்கு பரந்து விரிந்துள்ள கோரோலவ் பள்ளம் முழுவதும் பனி நிறைந்து, பனிப்படலம் போன்று காட்சியளிக்கிறது. 

குறித்த பள்ளம் பனிக்கட்டிகளால் நிறைந்திருப்பதாகவும், 1.8 கிலோ மீ்ட்டர் அடர்த்தியுடன் இந்த பனிக்கட்டிகள் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த கோரோலேவ் பள்ளம் செவ்வாய் கிரகத்தின் வடதுருவத்தின் அருகிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.