தொடர்ந்து பெய்து வரும் மழையுடனான காலநிலையினால் இராஜாங்கனை நீர்தேக்கத்தின் 8 வான் கதவுகள் நேற்றைய தினம் திறக்கப்பட்டது.இந்நிலையில் இராஜாங்கனை குளத்தில் நீராட சென்ற இரு இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். 

எனினும் குறித்த சம்பவத்தின் பிறகு இராஜாங்கனை நீர்தேக்கத்தின் வான் கதவுகளை மூடிய பிறகு நேற்று காலை முதல் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு உயிரிழந்த நபரின் சடலத்தை மீட்டுள்ளனர். 

இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்த நபர் அனுராதபுரம், சாலியவெவ பகுதியை சேர்ந்த 18 வயதுடைய நபரென்பது குறிப்பிடத்தக்கது.