ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்று குழு கூட்டம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்த நிறைவேற்றுக்குழுக் கூட்டம் இன்று முற்பகல் அளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

நடப்பு அரசியல் சூழ்நிலைகள் குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சி

களை வலுப்படுத்தி, அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.