மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) இரவு பயணித்த   அதி   சொகுசு பஸ் இன்று அதிகாலை புத்தளத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

மன்னாரில் இருந்து நேற்று இரவு 11 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த குறித்த பஸ் வீதியில் நின்ற யானை ஒன்றுடன் மோதியுள்ளமையினால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இதன் போது விபத்திற்குள்ளான யானை உயிரிழந்துள்ளதோடு, குறித்த பஸ்ஸில் பயணித்தவர்கள் பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பபட்டு வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், பஸ் முழுமையாக சேதம் அடைந்த்துள்ளதுடன் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.