இந்தோனேசியாவின் சுந்தா தீவை சுனாமி தாக்கியதில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 165 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த சுனாமி அனர்த்தம் நேற்று (22-12-2018) சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

சுனாமி தாக்கத்திற்குள்ளான தீவான சுந்தா, இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது.

குறித்த பகுதியில் எரி மலையொன்று வெடித்த பின்னர் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதன்பின்னரே குறித்த சுனாமி தாக்கியதாகவும் இந்த சுனாமி அனர்த்தத்தின்போது பல கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாகவும் அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த சுனாமி இந்தோனேசியாவின் பல தீவுகளையும் லம்பெக்கை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளையும் சுந்தா தீவின் பல பகுதிகளையும் தாக்கியுள்ளதாக இந்தோனேசிய வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.