(எம்.மனோசித்ரா)

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைவேலி பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

குறித்த சந்தேகநபரிடமிருந்து ஒரு கிராம் 100 மில்லி கிராம் கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

கைதானவர் 28 வயதுடைய இரணைமடு , உடையார்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.