பண்டாரவளை பிரதான வீதியில்  இன்று மாலை  இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை  3.30  மணியளவில் பண்டாரவளை  பிரதான வீதியில் தனியார் பஸ் ஒன்று பயணிகளை இறக்கிவிட்டு முன்நோக்கி சென்று கொண்டிருக்கும் பொது பிரேக் இல்லாமல் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து இரண்டு முச்சக்கர வண்டிகளுடன்  டிப்பர் வாகனம் ஒன்று மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 குறித்த விபத்தில் நால்வருக்கு பலத்தகாயம் ஏற்பட்ட நிலையில் இருவர் தியத்தலாவை பிரதான வைத்தியசாலையிலும் மேலும் இருவர் பதுளை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக  தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர்களின் நிலைய கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.