தெற்கு அதிவேக வீதியில் வாகனப் போக்குவரத்தின் போது அவதானத்துடன் இருக்குமாறு வீதிப் பாதுகாப்பு அதிகாரசபை கோரிக்கை விடுத்துள்ளது. 

இதேவேளை குறித்த நாட்களில் கடவத்தை, காலி பன்னதுவ மற்றும் மாத்தறை கொடகம வெளிச்செல்லும் வாயில்களுக்கு அருகில் வாகனங்கள் நீண்ட வருசையில் இருப்பதை அவதானிக்க முடிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பண்டிகை காலம் மற்றும் ஆண்டின் இறுதிப் பகுதி என்பதால் அதிவேக வீதியில் அதிகளவான வாகனங்கள் பயணிப்பதாகவும், இதனால் அங்கு வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் வீதி விபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்காக சாரதிகள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு வீதிப் பாதுகாப்பு அதிகாரசபை கோரிக்கை விடுத்துள்ளது.