டுபாயிலிருந்து அவுஸ்ரேலியா நோக்கி பயணித்த குறித்த விமானத்தில் பயணியொருவர் சுகயீனம் காரணமாக அவதியுற்றமையால் இவ்வாறு தரையிறக்கப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

உலகின் மிகப்பெரிய விமானமான ஏ380 ரக விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை திடீரென தரையிறக்கப்பட்டது.

இதன்போது சுகயீனமுற்ற பயணியை கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சையாக குறித்த விமானத்தின் ஊழியர்கள் அனுமதித்துள்ளனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அந்தவகையில் குறித்த விமானம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் 7.40 மணியளவில் அவுஸ்திரேலியா- சிட்னி விமான நிலையத்தை நோக்கி பயணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.