நாற்பத்தைந்து வயதைக் கடந்தவர்கள் பெரும்பாலும் Macular Degeneration எனப்படும் முதுமைக்கான பார்வைத்திறன் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். இதற்கான முழுமையான சிகிச்சை இன்று வரை கண்டறியப்படவில்லை என்றாலும், இதனை தொடக்க நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவதற்கான சிகிச்சைகள்  இருக்கிறது.

இவ்வகையான பார்வை திறன் குறைபாடு Dry Macular Degeneration மற்றும் Wet Macular Degeneration என்ற இரண்டு வகையினதாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. இதில் பெரும்பான்மையோருக்கு Dry Macular Degeneration என்ற பாதிப்பு தான் ஏற்படுகிறது.

இந்த பாதிப்பிற்கும் தொடக்க நிலை, இடை நிலை மற்றும் இறுதி நிலை மூன்று நிலைகள் உள்ளன. இறுதி நிலையினதான பாதிப்பிற்கு இதுவரை முழுமையான சிகிச்சை கண்டறியப்படவில்லை. இருந்தாலும் இதற்கான நிவாரணமாக வைத்தியர்கள் மீன் எண்ணெய் மாத்திரையை எடுக்க  வலியுறுத்துகிறார்கள்.

மீன் எண்ணெய் மாத்திரையில் இத்தகைய குறைபாட்டை தள்ளிப்போடும் சத்துகள் உள்ளது. அத்துடன் முதுமையில் ஏற்படும் மூட்டு வலிக்கும் உரிய நிவாரணமாக திகழ்கிறது. ஆனால் மீன் எண்ணெய் மாத்திரையை வைத்தியரின் அறிவுறுத்தல் இல்லாமல் பயன்படுத்தக்கூடாது. அவர்களின் வழிகாட்டல் இல்லாமல் தொடர்ச்சியாக பயன்படுத்தவும் கூடாது. குறிப்பாக ஒவ்வாமை உள்ளவர்கள் வைத்தியர்களின் கண்காணிப்பின்றி இதனை எடுக்கவே கூடாது.