கோட்டை ரயில் நிலையம் முன்பாக அடிப்படை சம்பளம்  ஆயிரம் ரூபா கோரி உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டடுள்ள மலையக இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை தினச் சம்பளத்தை உயர்த்தக் கோரியும் இதே கோரிக்கையை முன்னிலைப்படுத்தி கொழும்பு – கோட்டை ரயில் நிலையம் முன்பாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மலையக இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து அப்புத்தளைப் பகுதி தோட்ட தொழிலாரக்ள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதேவேளை அப்புத்தளைப் பகுதியின் தங்கமலை,இதல்கஸ்ஹின்ன போவை ஆகிய தோட்டங்களின் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் கவனயீர்ப்பு போராட்டத்தில ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.