மட்டக்களப்பு கல்லடி பகுதியில் முச்சக்கர வண்டி மீது தீவைப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு மரண வீட்டில் இடம்பெற்ற  கைகலப்பு காரணமாக முச்சக்கர வண்டி தீ வைக்கப் பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம்  தொடர்பாக  நால்வர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை  காத்தான்குடி பொலிஸார்  மேற்கொள்ளுகின்றமை  குறிப்பிடத்தக்கது.