உலகளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்த விழிப்புணர்வு போதிய அளவிற்கு மக்களிடையே ஏற்படவில்லை என்கிறார்கள்.

அதிலும் பெண்கள் மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது புற்றுநோய் வைத்திய ஆய்வாளர்கள் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காகவும், குணப்படுத்துவதற்காகவும் Truebeam Radiation Therapy என்ற சிகிச்சையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த நவீன சிகிச்சை மூலம் மூளை, நுரையீரல், தோல் மற்றும் மார்பகங்களில் ஏற்படும் புற்றுநோயை குணப்படுத்த இயலும். இந்த பகுதிகளில் உண்டாகும் புற்றுநோய் கட்டிகள் துல்லியமாக கண்டறிந்து அதனை அழிக்க இந்த சிகிச்சை  உதவுகிறது. 

புற்றுநோய் பாதிப்பை ஏற்பட்டவர்களுக்கு அதற்குரிய பரிசோதனைகளின் மூலம் புற்றுநோயின் நிலைகள் உறுதிப்படுத்தப்பட்டு, அதற்கேற்ற வகையில் சத்திர சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, கீமோதெரபி போன்ற சிகிச்சைகள் தீர்மானிக்கப்பட்டு அவை அளித்து, நோயாளிகளின் புற்றுநோயை கட்டுப்படுத்தி அதனை குணப்படுத்துகின்றனர்.

இந்நிலையில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புற்றுநோய் கட்டிகள் வேறு பகுதிகளில் பரவியிருந்தாலும், அதனையும் துல்லியமாக கண்டறிந்து கதிரியக்க மூலம் குணப்படுத்தும் சிகிச்சையாக Truebeam Radiation Therapy இருக்கிறது என லைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

டொக்டர் கோடீஸ்வரன்

தொகுப்பு அனுஷா.