(நா.தினுஷா) 

தேசிய அரசாங்கத்தினூடாக மக்களுக்குப்பெற்றுக்கொடுத்த வாக்குறுதிகளை குறுகிய காலத்தில் மிக விரைவாக பெற்றுக்கொடுக்கும். பிரச்சினைகளை தீர்த்து இடைநிறுத்தப்பட்ட வேலைத்திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்க ஆளும் கட்சி கூட்டத்தில் அனைத்து பிரதிதிதிகளும் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக தெரிவித்தார். 

மேலும் பெற்றுக்கொடுப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த 10 இலட்ச காணி உறுதிப்பத்திரங்களையும் துரிதகதியில் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்னார். 

வெள்ளிக்கிழமை (21-12-2018) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சினை பொறுப்பேற்றுதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.