நுகர்வோருக்கு  பாதிப்பு ஏற்படுத்த கூடிய வகையில் செயற்பட்ட 13 வியாபார நிலையங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

சிலாபம் பகுதியில் செயற்பட்டு வந்த  வியாபார நிலையம் ஒன்றில் பொதுமக்களின் பாவனைக்கு பயன்படுத்த முடியாத பொருட்களை  விநியோகம் செய்த மற்றும் களஞ்சியப்படுத்தி வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

சிலாபம் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இரண்டு நாட்கள் மேற்கொண்ட  சுற்றுவளைப்பின் போது  அசுத்தமான முறையில் செயற்பட்ட  13 வியாபார நிலையங்கள் இனங்காணப்பட்டுள்ளது.

சிலாபத்தை அண்டிய பகுதியில் வியாபார நிலையங்கள், ஹோட்டல்கள், சில்லறைகடைகள், பேக்கரி உட்பட 50க்கு மேற்பட்ட வர்த்தக நிலையங்களில் மக்கள் பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்ததாக சுகாதார பரிசோதகர்கள்  தெரிவித்துள்ளனர். 

மேலும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த  15 வர்த்தக நிலையங்களின் மீது எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

மனித பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்த 10 வர்த்தக நிலைகளை முற்றுகையிட்டுள்ளனர். 

சமைக்கப்பட்ட உணவு பொருட்கள், கேக் வகைகள், முட்டைகள் ஆகியன காலாவதியான நிலையில் குளிர் சாதனை பெட்டிகளிலிருந்து பெறப்பட்டதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இங்கு அங்கிகாரம் பெறாத சில வர்த்தக நிலையங்கள் செயற்பட்டு வந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

குறித்த வர்த்தக நிலையங்களின் மீது சிலாபம் நீதவான் நீதிமன்றில்  வழக்கு தொடரப்படவுள்ளதாக தெரிவித்தனர். 

பண்டிகை காலத்தின் போது நுகர்வோரின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவதற்காக குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக  பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.