ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நத்தார் விழா பேராயர் காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினதும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனவினதும் தலைமையில் நேற்று கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இந்த நத்தார் விழாவில் இலங்கைக்கான திருத்தந்தையின் பிரதிநிதி மேன்மைமிகு பியரே நுயன் வென் டொட் ஆயர் அவர்கள் உள்ளிட்ட அருட் தந்தைகள் மற்றும் அருட் சகோதரிகள், சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் ஜோன் அமரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கலைஞர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.