ஜனாதிபதி செயலக டெங்கு ஒழிப்பு பிரிவும் சுகாதார அமைச்சும் இணைந்து பிரகடனப்படுத்தியுள்ள டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திற்குட்பட்ட கல்லடி, நாவற்குடா பிரதேசங்களில் நேற்றும் இன்றும் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது சுகாதார பிரிசோதகர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். 

நேற்று 1396 இடங்களிலும் இன்று 1167 இடங்களிலும் சோதனைகன் மேற்கொள்ளப்பட்டன. 

இதில் 250 இடங்களில் டெங்கு குடம்பிகள் பெருகியிருப்பது இனங்காணப்பட்டுள்ளதுடன் மிக மோசமான முறையில் டெங்கு பரவும் முறையில் இருப்பிடங்களை வைத்திருந்த நான்கு பேர் மீது வழக்குத்தாக்கல் செய்ய்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

கடற்படை, விமானப்படை, பொலிசார், சுகாதார திணைக்களம், மட்டக்களப்பு மாநகரசபை, கிராம சேவை அதிகாரிகள, சமுர்த்தி அதிகாரிகள் உட்பட பல அமைப்புக்கள் இணைந்து இந்நடவடிக்கையை மேற்கொண்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

-ஜவ்பர்கான்