செக் குடியரசின் கர்வினா நகரிலுள்ள நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளதோடு 10 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

வெடி விபத்து இடம்பெற்ற பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் நிலக்கரி சுரங்கின் மீத்தேன் வாயு வெடித்ததினாலேயே இவ் விபத்து நேர்ந்ததாகவும் அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.