செல்லுபடியற்ற வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர் வெலிகம, மிரிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபர்கள் 22 மற்றும் 27 வயதுடைய பாகிஸ்தான் மற்றும் எகிப்து நாட்டுப் பிரஜைகள் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

இருவரும் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.