இன்று அதிகாலை வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குடபட்ட பிராமானாளங்குளம் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் தனிமையில் வசித்துவந்துள்ளதுடன் இன்று அதிகாலை அவரிற்கு பாம்புதீண்டியதாக கூறப்படுகின்றது. அயலவர்களின் உதவியுடன் பூவரசங்கும் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் அவர் வரும் வழியிலேயே மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் பிராமனாளங்குளம் பகுதியை சேர்ந்த பசுபதி  வயது 65 என்ற முதியவரே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.