வவுனியா நகரசபை பூங்கா வீதியில் இன்று மாலை இலங்கையின் தேசியக்கொடியுடன் முச்சக்கரவண்டியில் அதிவேகமாக சென்ற இளைஞர்களை பொலிஸார் திரத்திப்பிடித்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

வவுனியா நகரசபைக்கு அருகே வழமை போன்று போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது ஓர் முச்சக்கரவண்டி அதிவேகமாக சென்றது இதனை அவதானித்த போக்குவரத்து பொலிஸார் முச்சக்கரவண்டியினை மறித்தனர். எனினும் பொலிஸாரின் சைகையினை கருத்தில் கொள்ளாது  முச்சக்கரவண்டி  அதிவேகமாக சென்றது.

பின் தொடர்ந்த பொலிஸார் நகரசபை பூங்காவிற்கு அருகே முச்சக்கரவண்டியினை மடக்கிப் பிடித்தனர்.

பொலிஸாரின் சைகையினை கருத்தில் கொள்ளாது அதிவேகமாக சென்றமை , முச்சக்கரவண்டியின் பின்புறமாக இலங்கையின் தேசியக்கொடியினை அநாகரிகமான முறையில் வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

முச்சக்கரவண்டியின் பின்புறமாக நாகரிகமான முறையில் காணப்பட்ட இலங்கையின் தேசியக்கொடியினை சீரான முறையில் வைக்குமாறு பொலிஸார் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க முச்சக்கரவண்டியில் பயணித்த இளைஞர் தேசியக்கொடியினை சீரான முறையில் மாற்றினார்கள்.