(இராஜதுரை ஹஷான்)

புதிய அரசாங்கத்திற்கு  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் ஆதரவினை வழங்கமாட்டார். மாறாக சட்டம் ஒழுங்கு அமைச்சின் ஊடாக தொடர் அழுத்தங்களையே பிரயோகிப்பார் என பாராளுமன்ற  உறுப்பினர்   வாசுதேவ  நாணயகார  தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய அரசாங்கத்தில் முக்கியமான அமைச்சுக்களிலே  பாரிய ஊழல் மோசடிகள் இடம் பெற்றது. அந்த அமைச்சுக்களுக்கு  பொறுப்பாக இருந்த அமைச்சர்களும் மோசடிகளுக்கு துணைபோயுள்ளார்கள். தற்போது  புதிய அரசாங்கத்தில் அமைச்சரவை  நியமிக்கப்பட்டுள்ளது.    இந்த அமைச்சரவை  நியமனத்தில் எவ்வித  மாற்றங்களும்  இடம் பெறவில்லை. ஊழல்வாதிகள்  கடந்த அரசாங்கத்தில்  வகித்த பதவிகளே  மீண்டும்  வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சுக்களின்    நியமனம்  30 இற்குள் வரையறுக்கப்பட்டமையானது. ஐக்கிய தேசிய  கட்சிக்கு  பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ளது.  சில முக்கியமானவர்களுக்கு பதவிகள்  வழங்க முடியாது என்று  ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை.  ஒருசிலரது எதிர்பார்ப்புக்களுக்கு  தடையினை ஏற்படுத்தியுள்ளது.