(நா.தனுஜா)

இலங்கையில் அண்மைக்காமாக நிலவிய அரசியல் நெருக்கடி நிலை தீர்க்கப்பட்டுள்ளமை மற்றும் புதிய அமைச்சரவை நியமனம் என்பவற்றுக்கு வரவேற்புத் தெரிவித்துள்ள ஜப்பான், தொடர்ந்தும் இலங்கையுடன் ஒன்றிணைந்து ஒன்றிணைந்து செயற்படத் தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி நிலைக்குத் தீர்வு காணப்பட்டு, புதிய அமைச்சரவை நியமனம் பெற்றுள்ளமைக்கு வரவேற்புத் தெரிவிக்கும் வகையில் இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் நீண்டகால நட்புறவு நாடு என்ற வகையில் அண்மைக்காலமாக நிலவி வந்த அரசியல் குழுப்பநிலைக்குத் தீர்வு காணப்பட்டு அரசியல் உறுதிப்பாடு எட்டப்பட்டுள்ளமை தொடர்பிலும், புதிய அமைச்சரவை நியமனம் மற்றும் சட்டம் ஒழுங்கு என்பவற்றுக்கு அமைவான வெளிப்படைத்தன்மையான செயற்பாடுகள் என்பவற்றையும் வரவேற்கின்றோம்.

மேலும் ஜப்பான் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படத் தயாராக உள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்திக் கொண்டு இந்து – பசுபிக் பிராந்தியத்தில் அமைதியையும், ஸ்திரத்தன்மை, செழிப்பு என்பவற்றை ஏற்படுத்துவதற்கு முன்வர வேண்டும் எனக் குறிப்பிட்பட்டுள்ளது.