வெலிமடயில் தனியார் பஸ் ஊழியர்கள் இன்று பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,  

வெலிமடயில் நேற்று மாலை பிரதான பஸ் தரிப்பிடத்தில் தனியார் மற்றும்  இ.போ.ச  பஸ் பணியாளர்களிடையே இடம்பெற்ற கை கலப்பில் தனியார் பஸ் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில் குறித்த சம்பவம்  போன்று மீண்டும் இடம்பெறாமல் இருபதற்காக  குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தனியார் ஊழியர்கள் முன்னெடுத்துள்ளனர். 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் பஸ்களுக்கான குறித்த நேர அட்டவணையை தயாரித்து கொடுக்குமாறு கோரிக்கையை முன்வைத்தனர். 

குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக வெலிமட பிரதேச மக்கள்  போக்கு வரத்து தொடர்பான அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். 

 இந்நிலையில் குறித்த பிரச்சினைக்கு தீர்வு  காணுமுகமாக வெலிமட பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட  கலந்துரையாடல் பயனளிக்கவில்லை.

தனியார் பஸ் ஊழியர்கள் இன்றைய நாள் முழுவதும் பணிபகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.