ராஜீவ் கொலை வழக்கில் தண்டனைப் பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை ஆளுநரின் கையில் தான் உள்ளது என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

“பொன் மாணிக்கவேல் திட்டமிட்டு உள்நோக்கத்தோடு யாரோ ஒருவரின் கைப்பாவையாக செயல்படுகிறார்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது மூடப்பட்டது தான். ஆலையை திறப்பதற்கான எந்த வாய்ப்பையும் அரசு கொடுக்காது. கொள்கை முடிவின் அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. கட்சிக்கு விரோதமாக யார் செயல்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கு துணை முதல்வரின் சகோதரர் ஓ. ராஜா நீக்கம் ஒரு சிறந்த உதாரணம். 

ராஜீவ் கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை ஆளுநரின் கையில் தான் உள்ளது.” என அவர் தெரிவித்தார்.