எரிபொருள் விலை சூத்திரத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாக நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சில் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்று உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய மாதாந்தம் 10 ஆம் திகதி மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. 

இந்த மாற்றங்கள் காரணமாக பஸ், மற்றும் முச்சக்கர வண்டிக் கட்டணங்களிலும் தொடர்ச்சியான மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால் விலை சூத்திரங்கள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் நிதி அமைச்சராக‍ பொறுப்பேற்ற மங்கள சமரவீர குறித்த விலை சூத்திரத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.