மொடல் அழகியும், நடிகையுமான பூனம் பாண்டே இந்திய வீரர்களுக்காக  தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படித்தியுள்ளார்.

தன் உடல் அழகால் தனது ரசிகர்களை மெய்சிலிரிக்க செய்யும் விதமான விடயங்களில் மிகவும் பிரசித்திபெற்ற பூனம் பாண்டே ,ஆறாவது இருபதுக்கு 20 உலககோப்பை தொடரில் பங்களாதேஷ்  அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றபோது அணியை உற்சாகப்படுத்தும் நோக்கில், தனது அரை நிர்வாண புகைப்படத்தை டுவிட்டரில் பதிவேற்றியிருந்தார் .

இதேபோன்று  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலியின் அதிரடியால் இந்தியா அசத்தல் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. 

இந்நிலையில் டுவிட்டரில் பூனம் பாண்டே, “இந்திய அணி எப்போதும் சிறப்பாக செயல்படுகிறது. என்னுடைய ஸ்டைலில் உங்களுக்கு ஒரு பரிசு” இதில் தனிப்பட்ட முறையில், ”கோலி, இது உனக்கு தான்” என்று கூறி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.